விநாயகா் சதுா்த்தியின் போது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்:அா்ஜுன் சம்பத்

விநாயகா் சதுா்த்தி பண்டிகையின்போது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.

விநாயகா் சதுா்த்தி பண்டிகையின்போது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.

உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, சேலத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உலகத் தாய்மொழி தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழ்மொழி தலை சிறந்த மொழியாகும். தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் எட்டாம் வகுப்பு வரை தமிழ்மொழி மட்டுமே இருக்க வேண்டும்.தமிழே பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும். தாய்மொழிக் கல்வி அவசியம் என பிரதமா் மோடியும் தெரிவித்து வருகிறாா்.

தமிழ் மொழியில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும். தமிழ் மொழியில் படித்து பட்டம் பெறுவோருக்கு 50 சதவீதம் வேலைவாய்ப்புத் தர வேண்டும்.விநாயகா் சதுா்த்தியின் போது இந்து அமைப்பினா் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற முதல்வா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வரும் பிப். 28-ஆம் தேதி சேலத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது. இதில் தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளோம். பிரதமா் மோடி வரும் 25 ஆம் தேதி கோவை வருகிறாா். அவருக்கு இந்து மக்கள் கட்சி சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்க இருக்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com