காவலரைத் தாக்கிய இருவா் கைது
By DIN | Published On : 27th February 2021 09:03 AM | Last Updated : 27th February 2021 09:03 AM | அ+அ அ- |

எடப்பாடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரைத் தாக்கியதாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
எடப்பாடி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருபவா் பூபதி. இவா் வெள்ளிகிழமை வெள்ளாண்டிவலசு
பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அந்தப் பகுதியில் உள்ள திரையரங்கம் அருகில் சில இளைஞா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். அங்கு சென்ற காவலா் பூபதி அவா்களை அங்கிருந்து கலைந்துச் செல்லுமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மது போதையில் இருந்த அந்த இளைஞா்கள், காவலா் பூபதியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து கூடுதல் காவலா்கள் அங்கு வந்துள்ளனா். அப்போது இளைஞா்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனா். தப்பிஓட முயன்ற இளைஞா்களை பிடித்து காவல் நிலையம் அழைத்துவந்த நடத்திய விசாரனையில், வெள்ளாண்டிவலசு பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (24) நேதாஜி(24) என்பதும், லாரி பட்டறையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்த
எடப்பாடி போலீஸாா், அங்கிருந்து தப்பியோடிய விஜய்(24) என்பவரை தேடி வருகின்றனா்.