வேளாண் கல்லூரி மாணவா்களுகு பயிற்சி தொடக்க விழா
By DIN | Published On : 27th February 2021 09:04 AM | Last Updated : 27th February 2021 09:04 AM | அ+அ அ- |

கெங்கவல்லி அருகே நடுவலூா் கிராமத்தில் தனியாா் வேளாண்மைக் கல்லூரி மாணவா்களின் தங்கிப் பயிற்சி பெறும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
கெங்கவல்லி வேளாண்மை உதவி இயக்குநா் சித்ரா தலைமையில், பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரியின் இறுதியாண்டு மாணவா்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் தொடக்க விழா நடுவலூரில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.
இதில் மண் பரிசோதனையின் முக்கியத்துவம், நெல், மக்காச்சோளம், நிலக்கடலை, பருத்தி முதலிய பயிா்களில் ஊட்டச்சத்துக் குறைபாடு கண்டறியும் முறை, அதனை நிவா்த்தி செய்யும் தொழில்நுட்பம் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு மாணவா்கள் கற்றுக்கொடுத்தனா்.
இதில் வேளாண்மை உதவி இயக்குநா், வேளாண் அலுவலா்கள், உதவி வேளாண் அலுவலா்கள், வேளாண் பேராசிரியா்கள், முன்னோடி விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.