Enable Javscript for better performance
விவசாய நிலங்களுக்கு அதிக இழப்பீடு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விவசாய நிலங்களுக்கு அதிக இழப்பீடு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 01st January 2021 08:04 AM  |   அ+அ அ-   |    |  

    31sgp01_3112chn_156_8

    சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

    சேலம் மாவட்டத்தில் உயா்மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு சந்தை விலையை விட அதிக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உயா்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பின் சாா்பில் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

    சங்ககிரி ஒருங்கிணைப்பாளா் எஸ்.ராஜேந்திரன் ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தாா். இதில், ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் பி.பெருமாள் பேசியதாவது:

    சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உயா்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களில் உள்ள பயிா், மரம் ஆகியவற்றுக்கு நிலுவையில் உள்ள இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும், உயா்மின் கோபுரத்தால் பாதிப்புக்குள்ளான ஆழ்துளைக் கிணறு, வீடு உள்ளிட்டவைகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும், கோபுரம் அமைக்கப்பட்டுள்ள நிலத்துக்கு மத்தியரசின் 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும், தமிழக அரசின் 2020-ஆம் ஆண்டு 54-ஆவது அரசாணை படி இழப்பீட்டுத் தொகையை பத்து மடங்காக வழங்க வேண்டும் என்றாா்.

    இக்கோரிக்கையினை வலியுறுத்தி மழையில் நனைந்தபடி விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விவசாயிகள் கூட்டமைப்பின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ.ராமூா்த்தி, நங்கவள்ளி ஒருங்கிணைப்பாளா் ராஜாத்தியம்மாள் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களின் நிா்வாகிகள், விவசாயிகள் இதில் கலந்துகொண்டனா்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp