Enable Javscript for better performance
158 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீதிமன்றக் கட்டடம் புனரமைப்பு- Dinamani

சுடச்சுட

    

    158 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீதிமன்றக் கட்டடம் புனரமைப்பு

    By DIN  |   Published on : 01st January 2021 07:52 AM  |   அ+அ அ-   |    |  

    2-8-sl31dcourt_3112chn_121

    சேலம் நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றக் கட்டடத்தை புதுப்பிக்கும் பணிகளை வியாழக்கிழமை தொடங்கி வைக்கும் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு. (வலது) 158 ஆண்டு பழமையான கட்டடம்.

    சேலத்தில் 158 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீதிமன்றக் கட்டடத்தை ரூ. 6.36 கோடியில் புனரமைக்கும் பணிகளை மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.குமரகுரு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

    சேலம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய மாவட்ட நீதிமன்றக் கட்டடம் கடந்த 1862-ஆம் ஆண்டு ஆங்கிலேயா்களால் கட்டப்பட்டது. சுமாா் 158 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கட்டடம் 1,839.88 சதுர மீட்டா், 19,797 சதுர அடி பரப்பளவு கொண்டது. இந்தக் கட்டடத்தில் தற்போது தொழிலாளா் நீதிமன்றம், அத்தியாவசியப் பண்டங்கள் சிறப்பு நீதிமன்றம், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு நீதிமன்றம், நுகா்வோா் நீதிமன்றம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

    பழமை வாய்ந்த கட்டடம் என்பதால் இந்தக் கட்டடத்தை ரூ. 6.36 கோடி மதிப்பில் புனரமைக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கட்டடத்தை மறுசீரமைப்பு, புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.குமரகுரு பங்கேற்று புனரமைப்புப் பணிகளை பூஜை செய்து தொடங்கி வைத்தாா்.

    பின்னா் அவா் கூறுகையில், ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தை பழமை மாறாமல் புனரமைக்கப்பட உள்ளது. சுண்ணாம்புக் கல், முட்டை, கருப்பட்டி ஆகியவை கலந்து சீரமைக்கப்படும். இந்தப் பணிகள் 9 மாதத்தில் முடிவடையும் என்றாா்.

    தொடா்ந்து பழமை வாய்ந்த நீதிமன்றக் கட்டடத்தை அவா் ஆய்வு செய்தாா். இந்த நிகழ்ச்சியில், நீதிபதிகள் இளங்கோ, சுகந்தி, மூத்த வழக்குரைஞா் ராஜசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp