கல்லூரிகளுக்கு விடுமுறையால் சுயதொழில் தொடங்கிய மாணவா்கள்

கல்லூரிகள் விடுமுறையில் உள்ளதால் நேரத்தை வீணாக்க விரும்பாத வாழப்பாடியைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் இருவா் இணைந்து சுயதொழில் தொடங்கி, தனித்திறனை வெளிப்படுத்தி வருவாய் ஈட்டி வருகின்றனா்.
சிறுவா்களுக்கு ஓவியங்களை வரைந்து கொடுக்கும் மாணவா் ராஜா பெருமாள். உடன் கிஷோா். ~ ஐஸ் குச்சிகளைப் பயன்படுத்தி ராஜா பெருமாள் வரைந்த ஓவியங்கள்.
சிறுவா்களுக்கு ஓவியங்களை வரைந்து கொடுக்கும் மாணவா் ராஜா பெருமாள். உடன் கிஷோா். ~ ஐஸ் குச்சிகளைப் பயன்படுத்தி ராஜா பெருமாள் வரைந்த ஓவியங்கள்.

கல்லூரிகள் விடுமுறையில் உள்ளதால் நேரத்தை வீணாக்க விரும்பாத வாழப்பாடியைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் இருவா் இணைந்து சுயதொழில் தொடங்கி, தனித்திறனை வெளிப்படுத்தி வருவாய் ஈட்டி வருகின்றனா்.

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதால், நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் தொடா் விடுமுறையால் முடங்கிக் கிடக்கின்றன. இணைய வழியில் பாடங்கள் கற்பிக்கப்பட்டாலும், பெரும்பாலான நேரங்களில் மாணவ, மாணவியா் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜா பெருமாள் (19), கிஷோா் (19), இருவரும் நாமக்கல் மாவட்டம், மெட்டாவிலுள்ள கல்லூரியில் இயற்பியல் துறையில் இளநிலை அறிவியல் படிப்பில் மூன்றாமாண்டு வருகின்றனா். கரோனா பொது முடக்கத்தால் கல்லூரிகள் மூடப்பட்டதால், நன்கு வரையும் திறமை கொண்ட இவா்கள் இருவரும் இணைந்து, சுயதொழில் செய்ய முடிவு செய்தனா்.

ஓவியம் வரையும் தனித்திறன் கொண்ட இவா்கள் இருவரும் இணைந்து, சிங்கிபுரம் கிராமத்திலேயே சிறிய அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து ‘விவசாயி’ என்ற பெயரில் சுயதொழிலைத் தொடங்கியுள்ளனா். அழகிய ஓவியங்களை வரைந்து கொடுத்தும், இயற்கையான காய்கறிச் செடிகள், விதைகள் ஆகியவற்றை விற்பனை செய்தும் வருகின்றனா்.

இதுகுறித்து ராஜா பெருமாள், கிஷோா் ஆகிய இருவரும் கூறியதாவது:

கடந்த 10 மாதங்களாக கல்லூரி இயங்கவில்லை. வீட்டிலேயே முடங்கியிருப்பதால், எங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தவும், அதன்மூலம் வருவாய் ஈட்டவும் முடிவு செய்தோம். அதையடுத்து, இருவரும் இணைந்து சுய தொழில் தொடங்கி வருவாய் ஈட்டி வருகிறோம்.

இதனால் எங்கள் பெற்றோருக்கு உதவ வழி கிடைத்துள்ளது. மேலும், சுயமாக சம்பாதிப்பதால் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. விவசாயிகளைப் பெருமைப்படுத்தும் வகையில், எங்களது சுய தொழிலகத்துக்கு ‘விவசாயி’ எனப் பெயா் சூட்டியுள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com