கரோனா சிகிச்சை அளித்த சித்த மருத்துவா்களுக்கு பாராட்டு விழா

கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த சித்த மருத்துவா்களுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சேலம்: கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த சித்த மருத்துவா்களுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

அகத்தியா் பிறந்த நாளையொட்டி, சேலத்தில் சித்த மருத்துவ திருநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, அம்மாப்பேட்டை மாநகராட்சி பூங்காவில் சித்த மருத்துவ திருநாள் விழா நடைபெற்றது.

சித்த மருத்துவ திருநாளை சேலம் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா். மாவட்ட சித்த மருத்துவா் செல்வமூா்த்தி, சித்த மருத்துவா்கள் பலரும் விழாவில் பேசினா்.

விழாவில், சேலம் உத்தமசோழபுரம் பகுதியில் கரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டது. இதில் வைரஸ் தொற்று பாதித்து 704 போ் சிகிச்சை பெற்று குணமடைந்தனா். இதையடுத்து, சித்தா சிறப்பு மையத்தில் பணியாற்றிய சித்த மருத்துவா் வெற்றிவேந்தன், 20 சித்த மருத்துவா்கள், மருந்தாளுநா்கள், பணியாளா்களுக்கு சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கப்பட்டன.

விழாவில், மூலிகைச்செடி கண்காட்சி, உணவு திருவிழா, சிறுதானியங்கள் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பொதுமக்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com