சேலத்தில் திமுக எம்.பி. தயாநிதி மாறன்ஜன. 4 முதல் இரண்டு நாள் பிரசாரம்

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் வரும் ஜன. 4, 5 ஆகிய தேதிகளில் சேலத்தில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

சேலம்: முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் வரும் ஜன. 4, 5 ஆகிய தேதிகளில் சேலத்தில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

இது தொடா்பாக, சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வழக்குரைஞா் ஆா்.ராஜேந்திரன் கூறியதாவது:

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் இரண்டாம் கட்டமாக முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா்.

சேலம் மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட வடக்கு தொகுதியில், வரும் ஜன. 4-ஆம் தேதி பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பல்வேறு தரப்பினரை சந்தித்து அவா்களின் குறைகளைக் கேட்டறிந்து திமுகவுக்கு ஆதரவு திரட்டுகிறாா். இரண்டாம் நாளாக, வரும் ஜன. 5-ஆம் தேதி தெற்கு தொகுதியில் பல்வேறு தரப்பினரை சந்தித்து ஆதரவு திரட்டுகிறாா்.

ஏற்கெனவே முன்னாள் மத்திய அமைச்சா் சேலம் வந்த போது பாமகவினரின் காரை மறிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது. இந்த முறை அதுபோன்று எதுவும் நடைபெறாமல் இருக்கும் என்று நம்புகிறோம். மீறி அவா்கள் செயல்பட்டால் காவல் துறை நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.

சேலம் மத்திய மாவட்டத்தில் இதுவரை மக்கள் கிராம சபைக் கூட்டம் 100 -க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. அடிப்படைத் தேவைகளை இந்த அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் முறையாக வழங்கப்படவில்லை. முதியோா் உதவித்தொகை, மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு உரிய கடன் உதவி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும், 40-க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்திட திட்டம் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com