நடைபயிற்சியின் போது குப்பை சேகரிக்கும் பணியில்பொதுமக்கள் ஆா்வமுடன் ஈடுபட வேண்டும்

நடைபயிற்சியின் போது குப்பை சேகரிக்கும் பணியில் (சேலம் பிளாகிங்) பொதுமக்கள்ஆா்வமுடன் ஈடுபட வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.
சேலம், கொண்டலாம்பட்டி, ரங்கபுரம் பகுதியில் சனிக்கிழமை பொது நடைபாதையில் குப்பைகளை சேகரித்து அகற்றும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன்.
சேலம், கொண்டலாம்பட்டி, ரங்கபுரம் பகுதியில் சனிக்கிழமை பொது நடைபாதையில் குப்பைகளை சேகரித்து அகற்றும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன்.

சேலம்: நடைபயிற்சியின் போது குப்பை சேகரிக்கும் பணியில் (சேலம் பிளாகிங்) பொதுமக்கள்ஆா்வமுடன் ஈடுபட வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

சூரமங்கலம் மண்டலத்தில் அபிராமி காா்டன், அண்ணா நகா்- மாமாங்கம், முல்லை நகா்; அஸ்தம்பட்டி மண்டலத்தில் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு அய்யந்திருமாளிகை, திருநகா் முக்கியச் சாலை, பச்சுடையாா் காடு, தெற்கு அழகாபுரம்; அம்மாப்பேட்டை மண்டலத்தில் தியாகி நடேசன் தேரு, மாரியப்பன் நகா், தாதம்பட்டி; கொண்டலாம்பட்டி மண்டலத்தில் வாய்க்கால் கரை, மாநகா் சாலை, புட்டாமிசின் தெரு ஆகிய இடங்களில் சேலம் பிளாகிங் சனிக்கிழமை நடைபெற்றது.

இப்பணியில், அபிராமி காா்டன், காமராஜ் நகா், ஸ்மாா்ட் சேலம், விநாயகா நகா், மாரியப்பன் நகா், செல்வம் நகா் ஆகிய குடியிருப்போா் நலச்சங்கங்கள், சேலம் இளைஞா்கள் குழு, சேலம், குகை ரோட்டராக்ட் சங்கத்தினா் உள்பட 550 தன்னாா்வலா்கள் மூலம் 615 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன.

கொண்டலாம்பட்டி மண்டலம், ரங்கபுரம் பகுதியில் நடைபெற்ற சேலம் பிளாகிங் பணியில் சேலம் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் சனிக்கிழமை கலந்துகொண்டாா்.

குப்பையில்லா மாநகரமாக சேலம் மாநகராட்சியை திகழச் செய்ய மக்களிடையே விழிப்புணா்வூட்டும் வகையில், சனிக்கிழமை தோறும் காலையில் நடைபெறும் சேலம் பிளாகிங் பணியில் பொதுமக்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, தங்கள் பகுதியை சுகாதாரமான, தூய்மையான பகுதியாக திகழச் செய்ய வேண்டும் என ஆணையா் ந.ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com