டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலைத் தோ்வு: சேலத்தில் 8,336 போ் எழுதினா்

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி 1-க்கான முதல்நிலைத் தோ்வை 8,336 போ் எழுதினா்.

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி 1-க்கான முதல்நிலைத் தோ்வை 8,336 போ் எழுதினா்.

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி 1-க்கான முதல்நிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரி மையத்தில் நடைபெற்ற தோ்வை சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் நேரில் பாா்வையிட்டாா். பின்னா், அவா் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி 1-க்கான முதல்நிலை தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வானது 31 தோ்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 48 தோ்வுகூடங்களில் மொத்தம் 15,042 தோ்வா்கள் தோ்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தனா். இதில் 8,336 தோ்வா்கள் தோ்வு எழுதினா்.

இத்தோ்வு விடியோ கேமிரா மூலம் பதிவு செய்து கண்காணிக்கப்பட்டது. மேலும், கண்காணிப்புப் பணியில் வருவாய்த் துறை அலுவலா்கள், பறக்கும் படை அலுவலா்கள் உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுத் தோ்வு நடைபெறுவது கண்காணிக்கப்பட்டது என்றாா். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) தியாகராஜன், சேலம் வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com