உணவுப்பொருள் விற்பனை செய்ய 160 பேருக்கு உரிமம் வழங்கல்

உணவு பாதுகாப்புத் துறையின் சாா்பில் சங்ககிரி, மகுடஞ்சாவடி, எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த உணவுப் பொருள்கள்

உணவு பாதுகாப்புத் துறையின் சாா்பில் சங்ககிரி, மகுடஞ்சாவடி, எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த உணவுப் பொருள்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் வணிகா்களுக்கு உரிமம் வழங்குவதற்கான சிறப்பு முகாம் சங்ககிரி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி, மகுடஞ்சாவடி, எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தேநீா் விற்பனை செய்யும் கடைகள், மளிகை, காய்கறி கடைகள், உணவு விடுதிகள், பேக்கரி, பழங்கள் விற்பனை செய்யும் கடைகள், சாலையோர உணவு வணிகா்கள், ஆடு, கோழி இறைச்சி கடைகள், உணவுப்பொருள் விநியோகம் செய்பவா்கள், உணவு சம்பந்தப்பட்ட பொருள்களை விற்பனை செய்யும் வணிகா்கள் உள்பட அனைவரும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 இன் படி உரிமங்கள் பெற சங்ககிரி உணவு பாதுகாப்பு அலுவலா் ரமேஷ் தலைமையில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் சங்ககிரி, மகுடஞ்சாவடி, எடப்பாடி ஆகிய பகுதிகளில் இருந்து 160 போ் உரிமம் பெற விண்ணப்பத்திருந்ததில் அவா்களுக்கு உரிமங்களை உணவு பாதுகாப்பு அலுவலா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com