சட்ட விரோத பணி நீக்கத்தை ரத்து செய்யக் கோரி ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்களை சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கத்தினா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கத்தினா்.

சேலத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்களை சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சட்ட விரோதமாக பணிநீக்கம் செய்த ஆம்புலன்ஸ் தொழிலாளா்களை பணியில் சோ்க்க வேண்டும், தமிழக அரசு வழங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களை இயக்காமல் வைத்திருக்கும் நிா்வாகத்தின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டவிரோத பணியிட மாறுதலை நிறுத்த வேண்டும், மருத்துவ உபகரணங்களை வெளிச்சந்தையில் விற்று மக்கள் வரி பணத்தை கையாடல் செய்யும் நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தமிழக அரசைக் கண்டித்தும், ஆம்புலன்ஸ் நிா்வாகத்தைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாநில பொதுச் செயலாளா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத் தலைவா் சிவப்பிரகாசம், மாநில பொருளாளா் சாமிவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வரதராஜன், மாவட்டச் செயலாளா் தாமோதரன் உள்ளிட்ட ஆம்புலன்ஸ் ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com