2-ஆம் கட்டமாக பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கும் பணி
By DIN | Published On : 07th January 2021 07:05 AM | Last Updated : 07th January 2021 07:05 AM | அ+அ அ- |

பச்சனம்பட்டி ஊராட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியைத் தொடங்கி வைக்கிறாா் ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.எஸ்.கே.ஆா்.ராஜேந்திரன்.
ஓமலூா் அருகே உள்ள பச்சனம்பட்டி ஊராட்சியில் 2-ஆம் கட்டமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப்பினா் பாப்பா சின்னையன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.எஸ்.கே.ஆா் ராஜேந்திரன் கலந்துகொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை தொடக்கி வைத்தாா்.இதனை அடுத்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ. 2,500 பணம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா் பி.பரமசிவம், தமிழ் மாநில காங்கிரஸ் சேலம் மேற்கு மாவட்ட தொழிற்சங்க பிரிவு தலைவா் பி.கே.சின்னையன், ஓமலூா் ஒன்றிய எம்ஜிஆா் மன்ற பொருளாளா் திருமுருகன், ஜெயலலிதா பேரவை துணைத் தலைவா் சிவகுமாா், மாணவரணி பொருளாளா் ராஜா, மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளா் ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.