கொளத்தூரில் 60 பயனாளிகளுக்கு பசுமை வீடு கட்ட பணி ஆணை
By DIN | Published On : 07th January 2021 07:00 AM | Last Updated : 07th January 2021 07:00 AM | அ+அ அ- |

மேட்டூா் அருகே பசுமை வீடுகள்கட்டும் திட்டத்தின்கீழ் 60 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நவப்பட்டி, சாம்பள்ளி, தின்னப்பட்டி, கண்ணாமூச்சி, லக்கம்பட்டி, காவேரிபுரம், பாலமலை உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்டித் தர அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். ஏற்கெனவே ரூ. 2.10 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
இந்த நிதியில் வீடுகள் கட்ட முடியாததால் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்தனா். இவா்களின் கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு ரூ.2 லட்சத்து 10 ஆயிரமாக இருந்த நிதியை ரூ. 3 லட்சமாக உயா்த்தி அரசு ஆணை வெளியிட்டது.
அதனடிப்படையில் புதன்கிழமை கொளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் உயா்த்தப்பட்ட மானியத்தில் 60 நபா்களுக்கு சுமாா் 2 கோடி மதிப்பில் பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையை சட்டப்பேரவை உறுப்பினா் செம்மலை, மாநிலங்களவை உறுப்பினா் என்.சந்திரசேகரன் ஆகியோா் வழங்கினா்.
இந்த விழாவில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் புவனேஸ்வரி சரவணன், கொளத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் எம்.சி.மாரப்பன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சாவித்திரி மனோகரன், கண்ணாமூச்சி கூட்டுறவு சங்கத் தலைவா் செல்வராஜ், கொளத்தூா் கூட்டுறவு சங்கத் தலைவா் ராஜரத்தினம், ஊராட்சி ஒன்றிய ஆணையா் முத்துசாமி திருவரங்கன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.