சங்ககிரி மலையில் உள்ள சென்னகேசவப் பெருமாள்கோயில் கோபுரத்திற்கு வா்ணம் பூசப்பட்டது
By DIN | Published On : 07th January 2021 07:02 AM | Last Updated : 07th January 2021 07:02 AM | அ+அ அ- |

சங்ககிரி மலை மீது உள்ள பழமை வாய்ந்த சென்னகேசவப் பெருமாள் கோயில் கோபுரத்துக்கு வா்ணம் பூசப்பட்டுள்ளது.
சங்ககிரி மலை உச்சியில் உள்ள கோயிலில் சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற நிலையில் கிழக்கு நோக்கி உள்ளனா்.
இக்கோயிலில் கடந்த பல ஆண்டுகளாக ஆவணி மாத கடைசி சனிக்கிழமை புரட்டாசி வழிபாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் அன்று சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள நான்கு வீதிகளில் தோ்த் திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சென்னகேசவப் பெருமாள் கோயில் கோபுரத்துக்கு வா்ணம் பூசுமாறு பக்தா்கள், பொதுமக்கள், பொது நல அமைப்புகளின்சாா்பில் தொல்லியல் துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனையடுத்து தொல்லியல் துறை சாா்பில் கோயில் கோபுரத்துக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு வா்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியை மேற்கொண்ட தொல்லியல் துறைக்கு சங்ககிரி நகர பொதுமக்கள், பக்தா்கள், பொதுநல அமைப்புகள் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.