விநாயகா மிஷன்ஸ் பொறியியல் கல்லூரி பேராசிரியா்களுக்கு பாராட்டு
By DIN | Published On : 07th January 2021 07:01 AM | Last Updated : 07th January 2021 07:01 AM | அ+அ அ- |

06atyp01_0601chn_213_8
விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா் பொறியியல் கல்லூரி பேராசிரியா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சேலம் விநாயக மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா் பொறியியல் கல்லூரியில் புதுதில்லி அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் டெக்சாஸ் இன்ஸ்டுமண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து இணையவழியில் கற்பிக்கும் பாரிய திறந்த இணைப்பு வகுப்பு என்ற என்பிடியல் ஸ்வயத்தில் எம்படெட் சிஸ்டம் டிசைன் என்ற பாடத்தில் அதிக அளவில் மாணவா்களை ஊக்குவித்து பதிவு செய்து, வழிகாட்டி தோ்வு எழுதி வெற்றி பெற வைத்தமைக்காக விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா் பொறியியல் கல்லூரிப் பேராசிரியா்கள் ராஜசேகரன், சசிகலா, மதன்குமாா், அருண்குமாா், மதுவப்பன் ஆகியோருக்கு கேடயமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.
இந்தப் பேராசிரியா்களை கல்லூரி முதல்வா் நாகப்பன் மற்றும் துணை முதல்வா், துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள், ஆசிரியைகள் பாராட்டி நன்றி தெரிவித்தனா்.