மகுடஞ்சாவடியில் கரோனா தடுப்பூசி ஒத்திகை
By DIN | Published On : 09th January 2021 06:56 AM | Last Updated : 09th January 2021 06:56 AM | அ+அ அ- |

தடுப்பூசி ஒத்திகையை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன்.
மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதனை மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் பாா்வையிட்டாா். அப்போது வட்டார மருத்துவ அலுவலா் முத்துசாமி, மருத்துவா் ராதா லட்சுமி, பிடிஓ வெங்கடேசன், காவல் ஆய்வாளா் சண்முகசுந்தரம் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.