வாழப்பாடி அருகே மாநில கைப்பந்து போட்டி

வாழப்பாடி அருகே குமாரபாளையம் கிராமத்தில், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநில அளவிலான, ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்து போட்டி நடைபெற்றது. 
கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கிய விழா குழுவினர்.
கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கிய விழா குழுவினர்.

வாழப்பாடி அருகே குமாரபாளையம் கிராமத்தில், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநில அளவிலான, ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்து போட்டி நடைபெற்றது. 
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே குமாரபாளையம் கிராமத்தில் இயங்கும் நேரு யுவகேந்திரா இளைஞர் விளையாட்டு குழு மற்றும் ஊர் பொதுமக்கள்  சார்பில், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இரு தினங்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான மாபெரும் கைப்பந்து போட்டி நடைபெற்றது. 
இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 90 அணிகள் பங்கேற்றன. 

ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த சிங்கிபுரம் அணிக்கு குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுசீலா முருகேசன் ரூ.15,000, இரண்டாம் இடம் பிடித்த தம்மநாயக்கண்பட்டி அணிக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் வெண்ணிலா வெங்கடேசன் ரூ 12,000, மூன்றாம் இடம் பிடித்த அணிக்கு ஊராட்சி மன்ற துணை தலைவர் குழந்தைவேல் ரூ 8,000 பரிசு வழங்கினார்.
 பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த கோபிசெட்டிபாளையம் பி.கே.டி கல்லூரி அணி, இரண்டாம் இடம் பிடித்த ஆத்தூர் பாரதியார் மேல்நிலைப்பள்ளி அணிகளுக்கும் பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டது. 
விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை, குமாரபாளையம் நேரு யுவகேந்திரா இளைஞர் விளையாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com