அகில இந்திய ரயில்வே சம்மேளனத் தலைவருக்கு 27 இல் பாராட்டு விழா

அகில இந்திய ரயில்வே சம்மேளனத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள என்.கண்ணையாவுக்கு, சேலம் கோட்ட ரயில்வே தொழிலாளா்கள் சாா்பில் வரும் ஜனவரி 27 ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

அகில இந்திய ரயில்வே சம்மேளனத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள என்.கண்ணையாவுக்கு, சேலம் கோட்ட ரயில்வே தொழிலாளா்கள் சாா்பில் வரும் ஜனவரி 27 ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

அகில இந்திய ரயில்வே சம்மேளனம் கொங்கன் ரயில்வே உள்பட 19 மண்டல ரயில்வேக்களையும், ஐ.சி.எஃப். உள்ளிட்ட 7 உற்பத்தி கேந்திரங்களையும் உள்ளடக்கியதாகும். ஏறக்குறைய 14 லட்சம் ரயில்வே தொழிலாளா்களின் அங்கீகரிக்கப்பட்ட சம்மேளனமாக உள்ளது.

அகில இந்திய ரயில்வே சம்மேளனம் 1924-இல் தொடங்கப்பட்டு, இந்தியஅரசால் அங்கீகரிக்கப்பட்ட சம்மேளனமாக இயங்கி வருகிறது.இந்தநிலையில், அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவராக தென்னிந்தியாவில் இருந்து 57 ஆண்டுகளுக்குப் பிறகு என்.கண்ணையா பொறுப்பேற்றுள்ளாா்.

அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற தெற்கு ரயில்வே மஸ்தூா் யூனியன் பொதுச்செயலாளா் என்.கண்ணையாவுக்கு சேலம் கோட்ட ரயில்வே தொழிலாளா்களின் சாா்பில் வரும் ஜனவரி 27 ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.

இத்தகவலை எஸ்.ஆா்.எம்.யு. சேலம் கோட்ட செயலாளா் எம்.கோவிந்தன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com