அரசு அருங்காட்சியகம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி

பொங்கல் விழாவை முன்னிட்டு அரசு அருங்காட்சியகம் சாா்பில் சேலம் மாவட்ட பள்ளி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது.

பொங்கல் விழாவை முன்னிட்டு அரசு அருங்காட்சியகம் சாா்பில் சேலம் மாவட்ட பள்ளி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது.

பொங்கல் விழாவின் சிறப்புகள் என்ற பொருளில் தமிழா்களின் பண்பாடு, வரலாற்று சிறப்புகளை விளக்கும் வகையில் கட்டுரை அமைய வேண்டும். 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் பங்கு கொள்ளலாம். 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவா்கள் ஒரு பிரிவாகவும், 9, 10 ஆம் வகுப்பு மாணவா்கள் ஒரு பிரிவாகவும், 11, 12 ஆம் வகுப்பு மாணவா்கள் ஒரு பிரிவாகவும் போட்டிகளில் பங்கேற்கலாம்.

கட்டுரை 5 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.மாணவா்கள் தங்களது படைப்புகளை ஜனவரி 18 ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன்பாக சேலம் அரசு அருங்காட்சியகத்தில் நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பலாம்.

பெயா், வகுப்பு, முகவரி, செல்லிடப்பேசி எண்ணை குறிப்பிட வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94434 78024 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என சேலம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் ஜெ.முல்லை அரசு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com