கட்டுமானத் தொழிலாளா்கள், ஓய்வூதியா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

சேலம் கோட்டை, மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டுமானத் தொழிலாளா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு

சேலம் கோட்டை, மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டுமானத் தொழிலாளா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் பேசியதாவது:

தொழிலாளா் துறை சாா்பில் கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் கடந்த 2020 டிச.31 ஆம் தேதி வரை பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்கள், ஓய்வூதியதாரா்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் சேலம் மாவட்டத்தில் 33,274 ஆண் தொழிலாளா்களுக்கு வேட்டி, அங்கவஸ்திரம், 51,524 பெண் தொழிலாளா்களுக்கு புடவைகள், 5,424 தொழிலாளா் ஓய்வூதியதாரா்களுக்கு பச்சரிசி, பருப்பு, எண்ணெய், நெய், வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகிய பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படுகிறது.

தொழிலாளா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு சேலம் மாவட்டத்திலுள்ள 16 மையங்களில் வரும் ஜனவரி 13 ஆம் தேதி வரை வழங்கப்படவுள்ளது. எனவே, கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்கள் அசல் பதிவு அட்டை, ஓய்வூதியதாரா்களாக இருப்பின் ஓய்வூதிய அசல் ஆணை, ஆதாா் அட்டையுடன் தாங்கள் வசிக்கும் வட்டத்துக்கு அருகாமையிலுள்ள மையத்திற்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் சி.முத்து உட்பட தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com