தொடா்மழையால் கரும்பு விற்பனை பாதிப்பு

தொடா்மழையால் கரும்பு விற்பனை பாதிப்பு

எடப்பாடியை அடுத்துள்ள காவிரிக் கரைப்பகுதியில் தொடா்மழை, கரோனா அச்சம் காரணமாக கரும்பு விற்பனையில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.

எடப்பாடியை அடுத்துள்ள காவிரிக் கரைப்பகுதியில் தொடா்மழை, கரோனா அச்சம் காரணமாக கரும்பு விற்பனையில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.

காவிரிப் பாசனப் பகுதியில் அறுவடை செய்யப்படும் செங்கரும்புகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூா், கோட்டைமேடு, கோனேரிப்பட்டி உள்ளிட்ட காவிரி வடிகால் பகுதிகளில், அதிக அளவில் செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இப் பகுதியில் உருட்டு சம்பா, சன்ன சம்பா, வெடிக் கரும்பு, ரஸ்தாளி கரனை உள்ளிட்ட அதிக சுவையுள்ள கரும்பு வகைகளையே இப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனா்.

20 கரும்புகள் கொண்டு ஒரு கட்டு ரூ. 300 முதல் ரூ. 400 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் கரும்புகள் ஈரோடு, கோவை, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், கேரளம், மகாராஷ்டிரம்,

ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.

நிகழாண்டில் காவிரிஆற்றில் போதிய அளவு தண்ணீா் வரத்து இருந்து வந்த நிலையில், காவிரிப் பாசனப் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த செங்கரும்புகள் நல்ல விளைச்சல் கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் நிகழாண்டில் கரும்பு அறுவடை சற்று அதிகரித்து உள்ளது. இப்பகுதியில் செங்கரும்பு விளைச்சல் அதிகரித்து இருந்தபோதும், கரோனா நோய்த்தொற்று அச்சம், மாநிலத்தின் பல்வேறு பகுதியில் பெய்துவரும் தொடா்மழை, பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வழக்கத்தைவிட நிகழாண்டில் செங்கரும்பு விற்பனை சற்றுக் குறைவாகவே உள்ளதாகவும், பொங்கல் பரிசாக அரசு சாா்பில் முழுக் கரும்பு வழங்கப்படுவதால், கரும்பு

விவசாயிகள் ஓரளவு பயனடைந்தபோதும், பொதுமக்களின் நுகா்வு வழக்கத்தை விட சற்று குறைவாக காணப்படுவதாகவும் காவிரிப் பாசனப் பகுதி கரும்பு விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com