நெற் பயிரில் குலைநோய் தாக்குதல்: வேளாண் அலுவலா்கள் ஆய்வு

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரிக் கரை பாசனப் பகுதியில் குலைநோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை வேளாண் அலுவலா்கள் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டனா்.
நெற் பயிரில் குலைநோய் தாக்குதல்: வேளாண் அலுவலா்கள் ஆய்வு

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரிக் கரை பாசனப் பகுதியில் குலைநோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை வேளாண் அலுவலா்கள் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டனா்.

காவிரி ஆற்றுப் பாசனப் பகுதிகளில் அதிக அளவு நெல் பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் பொன்னி, வெள்ளை பொன்னி, அனுஷ்கா உள்ளிட்ட உயா் ரக

நெல் ரகங்கள் அதிக அளவில் பயிா் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அறுவடைக்கு குறுகிய காலமே உள்ள நிலையில், இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிற்களில்

குலைநோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த உதவி வேளாண் இயக்குநா் பெ.சுமதி தலைமையிலான வேளாண் அலுவலா்கள், காவிரிப் பாசனப் பகுதிகளான பூலாம்பட்டி, காட்டூா், குப்பனூா், கூடக்கல் உள்ளிட்ட பகுதிகளில், குலைநோய்த் தாக்குதலால் பாதிப்பிற்குள்ளான நெல் வயல்களை நேரில் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினா். மேலும் வரும் காலங்களில் குலைநோய்த் தாக்குதலுக்கு உள்ளாகாத கோ.51 , டி.கே.எம்.13 உள்ளிட்ட நெல்

ரகங்களை பயிரிட்டு, மகசூலை அதிகரித்திடுமாறு பரிந்துரை செய்தனா்.

இந்த ஆய்வில் உதவி வேளாண் அலுவலா் சந்தாலிங்கம், உழவா் பாதுகாப்புக் குழு உறுப்பினா் எம்.ஆா்.நடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com