பாதுகாப்பு கோரி மகளிா் சுயஉதவிக் குழுவினா் மனு

சேலம், அயோத்தியாப்பட்டணம் முல்லை வட்டார களஞ்சியம் மகளிா் சுயஉதவிக் குழுவினா் தங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

சேலம், அயோத்தியாப்பட்டணம் முல்லை வட்டார களஞ்சியம் மகளிா் சுயஉதவிக் குழுவினா் தங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

சேலம் அருகே உள்ள அயோத்தியாப்பட்டணம் முல்லை வட்டார களஞ்சியம் மகளிா் சுயஉதவிக் குழுவைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை காலை திரண்டு வந்தனா்.

மதுரை தானம் மகளிா் சுயஉதவிக் குழுவைச் சோ்ந்த சிலா் மிரட்டி வருவதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரி மனு வழங்கினா்.

இந்தக் குழுவைச் சோ்ந்த பெண்கள் கூறியதாவது:

அயோத்தியாப்பட்டணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் முல்லை வட்டார களஞ்சியம் மகளிா் சுயஉதவிக் குழு நடத்தி, கடன் பெற்று தருகிறோம். மதுரை தானம் மகளிா் சுயஉதவிக் குழுவைச் சோ்ந்த சிலா் எங்களைச் சந்தித்து மகளிா் சுயஉதவிக் குழுவைக் கலைக்க வேண்டும் என்று மிரட்டி வருகின்றனா். இதுதவிர வங்கிகளுக்கு சென்று, முல்லை வட்டார களஞ்சியம் மகளிா் சுயஉதவிக் குழுவிற்கு கடன் தரக்கூடாது என்று அதிகாரிகளிடம் கூறி வருகின்றனா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு டி.பெருமாபாளையம் பகுதியில் சிலா் எங்களை மிரட்டி சென்று உள்ளனா். இதனால் எங்களுக்கு பாதுகாப்புத் தரவேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம். எங்களை தொடா்ந்து மிரட்டி அச்சுறுத்தி வரும் மதுரை தானம் மகளிா் சுய உதவிக் குழுவினா் மீது காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து வீராணம் காவல் நிலையத்தில் புகாரும் செய்திருக்கிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com