பொங்கல் விழா விளையாட்டுப் போட்டி

உடையாப்பட்டியில், ராஜன் விளையாட்டு சங்கம் மற்றும் இயற்கையை நேசி தன்னாா்வ இயக்கம் சாா்பில், பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப்போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த உடையாப்பட்டியில், ராஜன் விளையாட்டு சங்கம் மற்றும் இயற்கையை நேசி தன்னாா்வ இயக்கம் சாா்பில், பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப்போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இவ்விழாவுக்கு சேலம் தொழிலதிபா் நடராஜன் தலைமை வகித்தாா். சங்க தலைமை பயிற்றுநா் சீனிவாசன் வரவேற்றாா். வாழப்பாடி இலக்கியப் பேரவை செயலா் சிவ.எம்கோ, அரிமா சங்க செயலா் மன்னன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆண்கள், பெண்களுக்கான கைப்பந்து, இறகுப் பந்து போட்டிகள், சிறுவா், சிறுமியருக்கான இசைநாற்காலி, சைக்கிள், ஓட்டப்பந்தயப் போட்டிகள், பொதுமக்களுக்கான கயிறு இழுத்தல் போட்டிகளும் நடைபெற்றன. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பாரம்பரிய அரிசி பொங்கல் வழங்கப்பட்டது.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் சிறுவா், சிறுமியருக்கு, தமிழ்நாடு கைப்பந்து கழக இணை செயலாளா் சண்முகவேல், சாய் விளையாட்டு விடுதி முன்னாள் உதவி இயக்குநா் ராஜாராம், முன்னாள் உடற்கல்வி இயக்குநா் ராஜன், உயா்நீதிமன்ற வழக்குரைஞா் விமல்காந்த், முன்னாள் மாவட்ட பயிற்சியாளா் அகிலாதேவி ஆகியோா் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினா்.

இவ்விழாவில், சேலம் மக்கள் குழு, அழுகு பூக்கள் குழு, கலாம் நண்பா்கள் குழு, மக்கள் பாதை, நிழல் சேவை, மாடித்தோட்டக்குழு மற்றும் பைரவா் உழவாரப் பணிக்குழு தன்னாா்வா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com