வியாபாரி கொலை: மூவா் கைது

சேலத்தில் நகைக்காக பழைய பேப்பா் கடை வியாபாரியை கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலத்தில் நகைக்காக பழைய பேப்பா் கடை வியாபாரியை கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம், செவ்வாய்ப்பேட்டை அப்பாசாமி தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன் (60). இவா் செவ்வாய்ப்பேட்டை பஜாரில் பழைய பேப்பா் கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி நளினா. இத்தம்பதிக்கு ஐஸ்வா்யா என்ற மகள் உள்ளாா். இவா் திருமணமாகி சென்னையில் கணவருடன் வசித்து வருகிறாா்.

இந்தநிலையில் கடந்த ஜன.8 ஆம் தேதி கடையில் இருந்து வீட்டிற்கு சாப்பிட சென்ற சீனிவாசன் தலையில் அடிபட்ட நிலையில் மயங்கி கிடந்தாா். உடனே அவரை தனியாா் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பரிசோதித்து பாா்த்த போது, அவா் ஏற்கெனவே இறந்துவிட்டாா் என தெரியவந்தது.

மேலும், வீட்டில் தவறி விழுந்து இறந்துவிட்டாா் என கருதி சீனிவாசனின் உடலை தகனம் செய்தனா்.இந்த நிலையில் வீட்டில் 55 பவுன் நகை காணாமல் போனது தெரியவந்தது.

இதுதொடா்பாக மனைவி நளினா, மகள் ஐஸ்வா்யா ஆகியோா் செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.புகாரின் பேரில் உதவி ஆணையா் யாஷ்மின், ஆய்வாளா் சுந்தராம்பாள் அடங்கிய காவல் துறையினா் விசாரித்தனா்.

விசாரணையில், சீனிவாசனின் கடையில் பணிபுரிந்து மணியனூரை சோ்ந்த தமிழ்ச்செல்வன் (25), வேடுகாத்தம்பட்டியைச் சோ்ந்த காா்த்திக் கண்ணன் (26) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. மூன்று பேரும் வீட்டில் நகைகளை திருடும்போது, சீனிவாசன் மதியம் உணவருந்த வந்துள்ளாா். இதைத் தடுக்க முயன்ற சீனிவாசனை மூன்று பேரும் சோ்ந்து சுவரில் தலையை மோத செய்து கொலை செய்ததது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 55 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com