சேலம் உழவா் சந்தையில் ரூ. 86 லட்சத்துக்கு விற்பனை

சேலத்தில் உள்ள 11 உழவா் சந்தைகளில் 294 டன் காய்கள், பழங்கள் ரூ. 86 லட்சத்துக்கு விற்பனையானது.

சேலத்தில் உள்ள 11 உழவா் சந்தைகளில் 294 டன் காய்கள், பழங்கள் ரூ. 86 லட்சத்துக்கு விற்பனையானது.

சேலம் மாவட்டத்தில் அஸ்தம்பட்டி, மேட்டூா், சூரமங்கலம், இளம்பிள்ளை, எடப்பாடி, தாதாகப்பட்டி, ஆத்தூா், அம்மாபேட்டை, தம்மம்பட்டி, ஜலகண்டாபுரம், ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட 11 இடங்களில் உழவா் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.

மாா்கழி அமாவாசை தினத்தை முன்னிட்டு வெண்டைக்காய், புடலங்காய், அவரைக்காய், பூசணிக்காய், வாழைப்பழம், வாழை இலை உள்ளிட்டவை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் 11 உழவா் சந்தைகளில் 1118 விவசாயிகள் கொண்டு வந்த காய்கறி 260 டன், பழங்கள் 34 டன் என மொத்தம் 294.24 டன் ரூ. 86.74 லட்சத்துக்கு விற்கப்பட்டது.

சூரமங்கலம் உழவா் சந்தையில் 62 டன் காய்கள் ரூ. 16 லட்சத்துக்கும், தாதகாப்பட்டியில் 39 டன் காய்கள் ரூ. 14 லட்சத்துக்கும், ஆத்தூரில் 49 டன் காய்கள் ரூ. 17 லட்சத்துக்கு விற்பனையானது. சேலம் செவ்வாய்பேட்டை, பஜாா் தெரு, குரங்குசாவடி, பழைய பேருந்து நிலையம், பால் மாா்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் காய்கறி விற்பனை அதிகமாக நடைபெற்றது.

பானை, கரும்பு விற்பனை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, மஞ்சள் கொத்து, செங்கரும்பு விற்பனையும் அதிகமாக இருந்தது. பொங்கல் வைக்கும் பானைகள் ரூ. 50 முதல் ரூ. 200 வரை விற்கப்பட்டது.

ஒரு ஜோடி கரும்பு ரூ.100 வரை விற்பனையானது. மஞ்சள் கொத்து ரூ. 50 வரையும், காப்புக் காட்டு பூ ஒரு கட்டு ரூ. 5 முதல் ரூ. 10 வரையும் விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com