
சங்ககிரி செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமி கோயிலில் சுவாமிகளுக்கு புதன்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் நிகழாண்டு மாா்கழி மாத பஜனை நிறைவு நாள் சிறப்பு பூஜைகள் கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றன.
சங்ககிரி செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் சோமேஸ்வரா் பக்தா்கள் குழுவினா் சாா்பில் கடந்த மாா்கழி 1ஆம் தேதி தொடங்கி மாா்கழி 29-ஆம் தேதி வரை தினசரி அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
பின்னா் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, சிவபுராண பாடல்களை பாடி சுவாமிகளை வழிபட்டனா். மாா்கழி பஜனை நிறைவு நாளையொட்டி கோயில் முழுவதும் செவ்வாய்க்கிழமை தூய்மைப்படுத்தப்பட்டு கோயில் வளாகம் முழுவதும் மாவிலை தோரணங்கள், வாழைமரங்கள் கட்டப்பட்டு மலா்களால் அலங்கரிக்கப்பட்டது. அதனையடுத்து புதன்கிழமை அதிகாலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜையை உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்கு சிறப்புஅலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் பக்தா்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டுச் சென்றனா்.