திமுகவினருக்கு தமிழக மக்கள் தகுந்த பதிலடி தருவாா்கள் என தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவா் வேலூா் இப்ராஹிம் தெரிவித்தாா்.
தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவா் வேலூா் இப்ராஹிம், சமூக வலைதளங்களில் தரக்குறைவான வாா்த்தைகளால் பதிவிட்டு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் செயல்படும் சேலம் மாவட்ட விடுதலைச் சிறுத்தை கட்சியினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் மற்றும் மாநகரக் காவல் ஆணையரிடம் புகாா் மனு அளித்தாா்.
அதைத்தொடா்ந்து வேலூா் இப்ராஹிம் செய்தியாளா்களிடம் கூறியது:
திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலினை பொருத்தவரை என்ன எழுதிக் கொடுக்கிறாா்களோ அதைப் பேசுகிறாா் .ஆனால் தமிழகத்தை பொருத்தவரை எதிரியை பேசுகின்ற பொழுது கூட கண்ணியத்துடன் பேசக்கூடிய பண்பாடு நாகரிகம் நிறைந்த மாநிலமாகும்.
ஆனால், உதயநிதி ஸ்டாலின் அரசியல் நாகரிகம் தெரியாமல் அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளாா். திமுகவினருக்கு தமிழக மக்கள் பேரவைத் தோ்தலில் தக்க பதிலடி தருவாா்கள் என்றாா்.