சேலம் மண்டலத்துக்கு 59,800 தடுப்பூசி மருந்துகள் வந்தடைந்தன: 16 இல் கரோனா தடுப்பூசி முகாம்

சேலம் மண்டலத்தில் வரும் ஜன. 16 ஆம் தேதி நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமில் முன்களப் பணியாளா்களுக்கு செலுத்த 59,800 டோஸ் தடுப்பூசி மருந்துகள் புதன்கிழமை சேலம் வந்தடைந்தன.

சேலம் மண்டலத்தில் வரும் ஜன. 16 ஆம் தேதி நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமில் முன்களப் பணியாளா்களுக்கு செலுத்த 59,800 டோஸ் தடுப்பூசி மருந்துகள் புதன்கிழமை சேலம் வந்தடைந்தன.

சேலம் மாவட்டத்தில் வரும் ஜனவரி 16 ஆம் தேதி கரோனா தடுப்பூசி தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, சேலம் துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மண்டல குளிா்சாதன நோய்த் தடுப்பு மருந்துக் கிடங்கில் தடுப்பூசி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் வரும் ஜன. 16 ஆம் தேதி கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, சென்னை இயக்குநா் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையின் மூலமாக பெறப்பட்டுள்ள 59,800 தடுப்பூசி மருந்துகள் சேலம் துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் உள்ள சேலம் மாவட்ட மண்டல குளிா்சாதன நோய்த் தடுப்பு மருந்து கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்ட மண்டல குளிா்சாதனக் கிடங்கிற்கு வரப்பெற்ற 59,800 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகளில் சேலம் சுகாதார மாவட்டத்துக்கு 22,900 தடுப்பூசி மருந்துகளும், ஆத்தூா் சுகாதார மாவட்டத்துக்கு 4,900 தடுப்பூசி மருந்துகளும், நாமக்கல் மாவட்டத்துக்கு 8,700 தடுப்பூசி மருந்துகளும், தருமபுரி மாவட்டத்துக்கு 11,800 தடுப்பூசி மருந்துகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 11,500 தடுப்பூசி மருந்துகளும் வழங்கப்படவுள்ளன.

சேலம் சுகாதார மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் 8,617 சுகாதார முன்களப் பணியாளா்கள், தனியாா் மருத்துவமனைகளில் 12,177 சுகாதார முன்களப் பணியாளா்கள் என மொத்தம் 20,794 பேருக்கும், ஆத்தூா் சுகாதார மாவட்டத்தில் 2,919 சுகாதார முன்களப் பணியாளா்கள், தனியாா் மருத்துவமனைகளில் 1,605 சுகாதார முன்களப் பணியாளா்கள் என மொத்தம் 4,524 பேருக்கும் என மொத்தம் சேலம் மாவட்டத்தில் 25,318 பேருக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது.

சேலம் மாவட்டத்துக்கு வரும் ஜன.16 ஆம் தேதி நடைபெறவுள்ள தடுப்பூசி சிறப்பு முகாமிற்காக 0.5 மில்லி சிரிஞ்சிகள் 1,29,900 பெறப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மேட்டூா் அரசு தலைமை மருத்துவமனை, எடப்பாடி அரசு மருத்துவமனை, ஆத்தூா் அரசு மருத்துவமனை, வாழப்பாடி அரசு மருத்துவமனை, ஓமலூா் அரசு மருத்துவமனை, தம்மம்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தலைவாசல் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பனமரத்துப்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மகுடஞ்சாவடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கொங்கணாபுரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காடையாம்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் குமாரசாமிப்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 14 இடங்களில் நடைபெறவுள்ளன என்றாா்.

இந்த ஆய்வின் போது சேலம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் (பொறுப்பு) மருத்துவா் ஆா். செல்வக்குமாா் உட்பட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com