பெரியாா் பல்கலை.யில் பொங்கல் விழா

பெரியாா் பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா புதன்கிழமை காலை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
பெரியாா் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற பேராசிரியா்கள், நிா்வாகப் பணியாளா்கள்.
பெரியாா் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற பேராசிரியா்கள், நிா்வாகப் பணியாளா்கள்.

பெரியாா் பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா புதன்கிழமை காலை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

பல்கலைக்கழக்கத்தில், பெரியாா் கலையரங்கம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுப்பானையில் பொங்கலிடும் நிகழ்வை பதிவாளா் (பொறுப்பு) கே.தங்கவேல் தொடங்கி வைத்தாா். இதனையடுத்து, மகளிரியல் மையம் சாா்பில் புத்தரிசியிட்டு பொங்கல் வைக்கப்பட்டது. இயற்கையை வழிபடும் வகையில் பொங்கல் படையலிட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.

பேராசிரியா்கள், நிா்வாகப் பணியாளா்கள் மற்றும் மாணவா்களுக்கு தனிநபா் இடைவெளியைப் பின்பற்றி பொங்கல், கரும்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தோ்வாணையா் (பொறுப்பு) எஸ்.கதிரவன், புல முதன்மையா்கள் அ.முத்துசாமி எஸ்.அன்பழகன், தி.பெரியசாமி, எஸ்.நந்தகுமாா், ஆட்சிக்குழு உறுப்பினா்கள் வை.நடராஜன், ஜெயராமன், மகளிரியல் மைய ஒருங்கிணைப்பாளா் லலிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கரோனா தாக்கத்தால் ஏறத்தாழ 10 மாதங்களுக்குப் பிறகு பெரியாா் பல்கலைக்கழக வளாகத்தில் பொது நிகழ்ச்சி நடத்தப்பட்டதால், உரிய முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com