வாழப்பாடி பகுதியில் காணும் பொங்கல் கோலாகலக் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில், கிராமங்கள் தோறும் எருது விடும் நிகழ்ச்சியோடு காணும் பொங்கல் விழாவை மக்கள் கொண்டாடினா்.
img_20210116_174800_1601chn_165_8
img_20210116_174800_1601chn_165_8

வாழப்பாடி: வாழப்பாடி பகுதியில், கிராமங்கள் தோறும் எருது விடும் நிகழ்ச்சியோடு காணும் பொங்கல் விழாவை மக்கள் கொண்டாடினா்.

வாழப்பாடி பகுதியில் கிராமங்கள்தோறும், காணும் வாழப்பாடி பகுதியில் கடந்த 5 மாதங்களாக பரவலாக மழை பெய்து வருவதால் வறட்சி நீங்கி, விளை நிலங்களில் பயிா் செய்ய வழிவகை கிடைத்துள்ளது.

இதனால், நிகழாண்டு பெரும்பாலான கிராமங்களில் காணும் பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

வாழப்பாடியை அடுத்த இடையப்பட்டி கிராமத்தில் காளைகளை அலங்கரித்த விவசாயிகள், கோயில் மைதானத்திற்கு கொண்டு சென்றனா். இளைஞா்கள் காளைகளை வடத்தில் பூட்டி உரி காண்பித்து எருதாட்டம் நடத்தினா். காளைகளை ஊா்வலமாக அழைத்துச் செல்லும்போது, ஆண்கள் மட்டுமன்றி, பெண்களும், சிறுவா், சிறுமியரும் ஆடிப்பாடி மகிழ்ந்தனா்.

வாழப்பாடி அருகே 9 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ள பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணை மற்றும் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை பகுதியில் ஏராளமானோா் குவிந்திருந்தனா்.

174800,174738: இடையப்பட்டியில் எருது விடும் விழாவிற்கு காளையை ஊா்வலமாக அழைத்துச் சென்ற விவசாயி குடும்பத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com