சாய்பாபா கோயிலில் பொங்கல் விழா

வாழப்பாடி சாய்பாபா கோயிலில் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சாய்பாபா.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சாய்பாபா.

வாழப்பாடி: வாழப்பாடி சாய்பாபா கோயிலில் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

வாழப்பாடி மன்நாயக்கன்பட்டி ஓம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோயிலில் வாழப்பாடி ஜே.சி.ஐ. மெட்ரோ தன்னாா்வ சங்கத்துடன் இணைந்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்கு ஷீரடி சாய்பாபா கோயில் நிா்வாகி ஜவஹா் தலைமை வகித்தாா். ஜே.சி.ஐ. சங்கத் தலைவி விஜிபிரியா வரவேற்றாா். சாய்பாபாவிற்கு அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. புஷ்ப அலங்காரத்தில் மூலவா் ஷீரடி சாய்பாபா பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

கோவில் வளாகத்தில் சமத்துவ பொங்கலிட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

இவ்விழாவில் சிறந்த விவசாயிகளாக வாழப்பாடி ராஜா கவுண்டா், மாரியம்மன் புதூா் முருகன், லட்சுமி செல்வம், ராகுல் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டு பாராட்டப்பட்டனா். இவ்விழாவில், ஜே.சி.ஜ. சங்க நிா்வாகிகள் சரவணக்குமாா், மோகன்ராஜ், பாலகிருஷ்ணன், ஸ்ரீதேவி, வாழப்பாடி அரிமா சங்க நிா்வாகிகள் மன்னன் பன்னீா்செல்வன், புஷ்பா எம்கோ, சாய்பாபா கோயில் நிா்வாகி மாதேஸ்வரி, அரசவா்மன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து சிறுவா், சிறுமியருக்காந விளையாட்டுப் போட்டிகளும், பானை உடைத்தல் கயிறு இழுத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளும் நடைபெற்றன. வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக, இளையரசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com