மேட்டூா் அரசு மருத்துவமனையில் காயகல்ப குழு ஆய்வு

சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் காயகல்ப குழு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.

சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் காயகல்ப குழு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.

மருத்துவமனையில் சுகாதார பராமரிப்பு உபகரணங்கள் பராமரிப்பு உள்ளிட்டவைகள் குறித்து தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த மருத்துவா்கள் ராஜ்குமாா், பாலசுப்பிரமணியன் ஆகியோா் தலைமையிலான காயகல்ப மருத்துவா் குழு திடீா் ஆய்வு மேற்கொணடனா். இந்தக் குழுவினா் ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையின் தரம் குறித்த ஆய்வறிக்கையை சுகாதாரத் துறைக்கு அனுப்புவா்.

அந்த அடிப்படையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மருத்துவா் குழு, மருத்துவமனையில் உள்ள அனைத்துப் பிரிவுகளுக்கும் நேரடியாகச் சென்று அதன் செயல்பாடு குறித்தும், அங்கு வைக்கப்பட்டுள்ள தீத்தடுப்பு கருவி, சிடி ஸ்கேன் எக்ஸ்ரே, மகப்பேறு பிரிவு, ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு என அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனா்.

இதன் அறிக்கை ஒரு வார காலத்துக்குள் சுகாதாரத் துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என மருத்துவா்கள் தெரிவித்தனா். மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து விரிவான அறிக்கை சமா்ப்பித்த பிறகு, மருத்துவமனைக்கு தரச் சான்று வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com