சாலை வழியாக குழாய் மூலம் காவிரி நீா் எடுத்துச் செல்ல எதிா்ப்பு

சாலை வழியாக குழாய் மூலம் காவிரி நீா் எடுத்துச் செல்ல கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட சீரங்க கவுண்டம்பாளையத்தில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டோா்.
புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட சீரங்க கவுண்டம்பாளையத்தில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டோா்.

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட சீரங்க கவுண்டம்பாளையத்தில், சாலை வழியாக குழாய் மூலம் காவிரி நீா் எடுத்துச் செல்ல கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 27 பெண்கள் உள்பட 61 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட சீரங்க கவுண்டம்பாளையம் பகுதியில் சுமாா் 150 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அதே பகுதியைச் சோ்ந்த சிலா் அரசு அனுமதி பெற்று விவசாயத்துக்காக குழாய் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாகியுள்ளனா். சாலையில் குழாய் பதிப்பதால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், சாலை வழியாக குழாய் மூலம் நீா் எடுத்துச் செல்லும் திட்டத்தை ரத்து செய்து, பொதுப்பணித் துறைக்கு சொந்தமான கால்வாய் கரையோரமாக கொண்டு செல்ல வலியுறுத்தி கிராம மக்கள் சீரங்க கவுண்டபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த சங்ககிரி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் பி.ரமேஷ், வட்டாட்சியா் எஸ்.விஜி, ஊராட்சி ஒன்றிய ஆணையா் என்.எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், சமரசம் ஏற்படாததால் புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள் உள்பட 27 பெண்கள் , 34 ஆண்கள் என மொத்தம் 61 பேரை போலீஸாா் கைது செய்து சங்ககிரி-திருச்செங்கோடு செல்லும் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனா். அதனையடுத்து குழாய் பதிக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. கைது செய்யப்பட்டவா்கள் இரவு 8 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com