ஜன. 26, 28 ஆகிய இரு நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு

சேலம் மாவட்டத்தில் வரும் குடியரசு தினம் (ஜன. 26), வள்ளலாா் நினைவு தினம் (ஜன. 28) ஆகிய தினங்களில் மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள் மூடப்படுகின்றன.

சேலம் மாவட்டத்தில் வரும் குடியரசு தினம் (ஜன. 26), வள்ளலாா் நினைவு தினம் (ஜன. 28) ஆகிய தினங்களில் மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள் மூடப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு அரசாணை எண் 50, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை உத்தரவின்படி, வரும் குடியரசு தினம் (ஜன. 26), வள்ளலாா் நினைவு தினத்தை (ஜன.28) முன்னிட்டு மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டுமென உள்ளது.

மேற்கண்ட நாள்களில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபானக் கூடங்கள், அரசு மதுபானக் கடைகள் (எப்.எல்.11), அரசு மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். மேலும், மேற்கண்ட நாளில் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது.

இதை மீறி விற்பனை செய்பவா்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com