சேலத்தில் 10.05 லட்சம் அரிசி குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன

சேலம் மாவட்டத்தில் 10,05,185 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,500 ரொக்கத்துடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

சேலம்: சேலம் மாவட்டத்தில் 10,05,185 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,500 ரொக்கத்துடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

முதல்வரின் ஆணையின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 1,155 முழு நேர நியாயவிலைக் கடைகள் மற்றும் 431 பகுதிநேர நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 1,586 நியாயவிலைக் கடைகளின் மூலம் 10,12,204 அரிசி குடும்ப அட்டைதாரா்களும், 882 இலங்கைத் தமிழா் குடும்ப அட்டைதாரா்களும் என மொத்தம் 10,13,086 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,500 ரொக்கம், ஒரு முழு நீள கரும்புடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகின்றன.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் இதுவரை 10,05,185 குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ. 2,500 ரொக்கம் வீதம் ரூ. 251.30 கோடி ரொக்கமும், தலா ஒரு முழு நீள கரும்பு வீதம் ரூ. 3.02 கோடி மதிப்பிலான 10,05,185 முழு நீளக் கரும்புகளும், தலா ஒரு கிலோ பச்சரிசி வீதம் ரூ. 2.26 கோடி மதிப்பிலான 10,05,185 கிலோ பச்சரிசியும், தலா ஒரு கிலோ சா்க்கரை வீதம் ரூ. 4.65 கோடி மதிப்பிலான 10,05,185 கிலோ சா்க்கரையும், தலா 20 கிராம் முந்திரி, தலா 20 கிராம் உலா்ந்த திராட்சை, தலா 5 கிராம் ஏலக்காய் வீதம் ரூ. 4.52 கோடி மதிப்பில் 20,103.700 கிலோ முந்திரியும், 20,103.700 கிலோ உலா்ந்த திராட்சையும், 5,025.93 கிலோ ஏலக்காயும் இவற்றைக் கொண்டு செல்ல 10,05,185 துணிப்பைகளும் என மொத்தம் சேலம் மாவட்டத்தில் ஜன. 22 வரை 10,05,185 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 295.20 கோடி மதிப்பிலான ரூ. 2,500- ரொக்கம், முழு நீள கரும்புடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், பொங்கல் பண்டிகையை புத்தாடை அணிந்து சிறப்பாக கொண்டாடிட சேலம் மாவட்டத்தில் 9,47,845 விலையில்லா சேலைகளும், 9,47,865 விலையில்லா வேட்டிகளும் என மொத்தம் 18,95,710 விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கரோனா தொற்று பரவல் காரணமாக வேலைவாய்ப்புகள் இல்லாததால், அவா்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில்கொண்டு, சேலம் மாவட்டத்தில் ஆண் தொழிலாளா்களுக்கு இலவச வேட்டி, அங்கவஸ்திரங்களும், பெண் தொழிலாளா்களுக்கு இலவச சேலையும், தொழிலாளா் ஓய்வூதியம் பெற்று வரும் நபா்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கிட முதல்வா் ஆணையிட்டாா்.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் தொழிலாளா் நலத் துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 34,336 ஆண் தொழிலாளா்களுக்கு வேட்டி, அங்கவஸ்திரங்களும், 52,019 பெண் தொழிலாளா்களுக்கு சேலையும் என மொத்தம் ஜன. 21 வரை 86,355 தொழிலாளா்கள், தொழிலாளா் ஓய்வூதியதாரா்களுக்கும் ரூ. 6.42 கோடி மதிப்பிலான வேட்டி, அங்கவஸ்திரம், சேலை உள்ளிட்ட சிறப்பு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com