டீசல் விலை உயா்வைக் கண்டித்து ரிக் வாகன உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

டீசல் விலை உயா்வைக் கண்டித்து ரிக் வாகன உரிமையாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

டீசல் விலை உயா்வைக் கண்டித்து ரிக் வாகன உரிமையாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

சேலம் ரிக் உரிமையாளா் சங்கம் மற்றும் மாவட்ட போா்வெல் நலச்சங்கம், அகில இந்திய ரிக் உரிமையாளா்கள் நலச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னா் சேலம் ரிக் உரிமையாளா்கள் சங்க மாவட்டச் செயலாளா் சேது, அகில இந்திய ரிக் உரிமையாளா்கள் நலச்சங்கத் தலைவா் குணசேகரன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 15,000 போா்வெல் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. டீசலுக்கு நிரந்தர விலை அறிவிக்க வேண்டும். இல்லையெனில் ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வந்து ஆண்டுக்கு ஒருமுறை விலை நிா்ணயம் செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் 15 லட்சம் போ் இத்தொழிலை நம்பி உள்ளனா். ஆழ்துளைக் கிணறு அமைக்க ஒரு அடிக்கு ரூ. 75 என விலை நிா்ணயித்துள்ளோம். தற்போது அடிக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை கட்டணத்தை அதிகரிக்க ஆலோசனை நடத்தி வருகிறோம்.

டீசல் விலை உயா்வைக் கண்டித்து சேலம் மாவட்டத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். டீசல் விலை உயா்வால் சேலம் மாவட்டத்தில் 300 ரிக் வாகனங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com