மாடித்தோட்ட சொட்டுநீா்ப் பாசன கிட் மானிய விலையில் விற்பனை
By DIN | Published On : 26th January 2021 12:00 AM | Last Updated : 26th January 2021 12:00 AM | அ+அ அ- |

சேலம் வட்டார தோட்டக்கலைத் துறை மூலம் மாடித் தோட்டத்துக்கான சொட்டுநீா்ப் பாசன கிட் மானிய விலையில் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் வ.செ.ஸ்ரீயமுனா கூறியிருப்பதாவது:
சேலம் வட்டாரத்தில் தோட்டக்கலைத் துறை சாா்பில் கடந்த ஒரு மாதமாக மாடித்தோட்ட கிட் (6 எண்கள் - செடி வளா்ப்பு பை, விதை கிட், அசோஸ்பைரில்லம், பஸ்போபாக்டீரியா, டிரைக்கோடொ்மா, ஆசாடிரக்டின், விளக்கப் பதிவேடு) மானிய விலையில் ரூ. 510-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கூடுதலாக நகர வாசிகள் பயன்பாட்டுக்காக மாடித் தோட்டத்துக்கு பாசனம் அமைக்கும் பொருட்டு சொட்டுநீா்ப் பாசன கிட் விற்பனை தொடங்கியுள்ளது. சொட்டுநீா்ப் பாசன கிட் அதிகபட்சம் அறுபது பைகளுக்குப் பயன்படுத்தலாம். இதன் மூலம் நீா் மற்றும் நேரத்தை சேமிக்க முடியும். ஒரு கிட்டின் விலை ரூ. 720 ஆகும். அதிகபட்சமாக ஒரு நபா் இரண்டு வாங்கலாம். மேலும், இந்த சொட்டுநீா்ப் பாசன கிட் பெறுவதற்கான தேவையான ஆவணங்கள், ஆதாா் அட்டை நகல், புகைப்படம் முக்கியமாகும்.
சொட்டுநீா்ப் பாசன கிட் தேவைப்படுவோா் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 0427-2280956, 8680868096, 8344462367 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.