சிவாலயங்களில் பிரதோஷ விழா
By DIN | Published On : 27th January 2021 08:59 AM | Last Updated : 27th January 2021 08:59 AM | அ+அ அ- |

தம்மம்பட்டி ஸ்ரீகாசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் திருக்கோயிலில் பிரதோஷ விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் சிவன், அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. பின்னா், நந்தீஸ்வரருக்கு பால், தயிா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனையடுத்து மலா்கள், அருகம்புற்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் திருவாசகம், தேவாரம் பாடல்களை பாடியபடி இருந்தனா். உற்சவமூா்த்தி கோயிலினுள் வலம் வந்தாா். அதேபோல செந்தாரப்பட்டி, வீரகனூா், கெங்கவல்லி, கூடமலையிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.