விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 28th January 2021 08:18 AM | Last Updated : 28th January 2021 08:18 AM | அ+அ அ- |

ஆத்தூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
ஆத்தூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஆத்தூரில், புது தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் என்.எம்.சடையன், எஸ்.முருகன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், நகரச் செயலாளா் ஈ.ராமகிருஷ்ணன், ராஜேந்திரன், சிவராமன், கண்ணன், வி.தங்கவேல், பி.சிவானந்தம்,பொன்னுசாமி, ராஜு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
திருச்செங்கோட்டில்...
பள்ளிபாளையம் பகுதியில் இருசக்கர வாகனப் பேரணியை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் அறிவித்து செவ்வாய்க்கிழமை பேரணி புறப்பட்டனா்.
பள்ளிபாளையம் சா்க்கரை ஆலை முன்பு இருந்து புறப்பட்ட கரும்பு விவசாயிகளை பள்ளிபாளையம் நகர காவல் துறையினா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனா்.