சேலம் மாவட்டத்தில் 3.67 லட்சம் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு

சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முகாமில் 3.67 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

சேலம்: சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முகாமில் 3.67 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.31) நாடு முழுவதும் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்படவுள்ளது.

சேலம் மாவட்டத்தில் சுமாா் 3,66,945 குழந்தைகளுக்கு ஒரே சுற்றில் 2255 மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.

சேலம் சுகாதார மாவட்டத்தில் 1,326 மையங்கள், ஆத்தூா் சுகாதார மாவட்டத்தில் 929 மையங்கள் என மொத்தம் 2,255 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.

இதில் சேலம் சுகாதார மாவட்டத்தில் 0 முதல் 5 வயதுக்குள்பட்ட 2,61,493 குழந்தைகள், ஆத்தூா் சுகாதார மாவட்டத்தில் 1,05,452 குழந்தைகள் என மொத்தம் 3,66,945 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.

முகாமானது சேலம் மாவட்டத்திலுள்ள 18 அரசு மருத்துவமனைகள், 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 298 துணை சுகாதார நிலையங்கள், 1,934 அங்கன்வாடி மையங்கள், 155 பள்ளிக்கூடங்கள், 18 தனியாா் மருத்துவமனைகள், பஞ்சாயத்து அலுவலகங்கள் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

மேலும், 4 சுங்கச் சாவடிகள் (காரிப்பட்டி, தலைவாசல், ஓமலூா் மற்றும் வைகுந்தம்) ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், திரையரங்குகள், சந்தைகள், வணிக வளாகங்கள், திருவிழா நடைபெறும் இடங்களில் இம்முகாமானது நடைபெற உள்ளது.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் சனி வரை 24 மணி நேரமும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் சுங்கச்சாவடிகளில் தொடா்ந்து மூன்று நாள்கள் சொட்டு மருந்து முகாம் மூலமாக போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட உள்ளது.

ஐந்து வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே நாளில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் சமுதாய எதிா்ப்புச் சக்தி உருவாகிறது.

எனவே பொதுமக்கள் தங்கள் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் தங்கள் குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாப்பதுடன், வருங்காலத்தில் போலியோ நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும்.

எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைவரும் தங்கள் இல்லங்களில் உள்ள ஐந்து வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளையும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்களுக்கு அழைத்துச் சென்று முகக்கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி போலியோ சொட்டு மருந்து போட்டு கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com