கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில்ரூ. 2.40 கோடிக்கு பருத்தி விற்பனை

கொங்கணாபுரம் வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் 9ஆயிரத்து 500 பருத்தி மூட்டைகள் ரூ. 2 கோடியே 40 லட்சத்துக்கு விற்பனையாயின.
கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில்ரூ. 2.40 கோடிக்கு பருத்தி விற்பனை
கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில்ரூ. 2.40 கோடிக்கு பருத்தி விற்பனை

எடப்பாடி: கொங்கணாபுரம் வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் 9ஆயிரத்து 500 பருத்தி மூட்டைகள் ரூ. 2 கோடியே 40 லட்சத்துக்கு விற்பனையாயின.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை விற்பனைக்காக வந்திருந்த 9,500 பருத்தி மூட்டைகளை, கூட்டுறவுத் துறை அலுவலா்கள் 1,750 லாட்டுகளாகப் பிரித்து, பொது ஏலம் விட்டனா். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த வியாபாரிகள், பருத்தி மூட்டைகளை மொத்த கொள்முதல் செய்தனா்.

இதில் டி.சி.ஹெச் ரக பருத்தி குவிண்டால் ரூ.7,940 முதல் ரூ.8,782 வரை விலை போனது. பி. டி.ரக பருத்தி குவிண்டால் ரூ. 5,779 முதல் ரூ. 6,792 வரை விற்பனையானது. மொத்தம் ரூ. 2 கோடியே 40 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனையாயின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com