மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்
By DIN | Published On : 01st July 2021 11:32 PM | Last Updated : 01st July 2021 11:32 PM | அ+அ அ- |

மேட்டூா் அனல் மின் நிலைய முதல் பிரிவில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகளும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
கடந்த மாதம் 18-ஆம் தேதி, முதல் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயா் பெல்ட் சேதமடைந்தது. இதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது பழுது நீக்கப்பட்டது. புதன்கிழமை இரவு முதல் பிரிவில் இரண்டு அலகுகளில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.