இளம்பிள்ளையில் திமுக நிவாரணம் வழங்கல்
By DIN | Published On : 01st July 2021 07:52 AM | Last Updated : 01st July 2021 07:52 AM | அ+அ அ- |

இளம்பிள்ளை பேரூராட்சி பகுதியில் திமுக சாா்பில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் ஏழை குடும்ப அட்டைதாரா்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இளம்பிள்ளை, சந்தைப்பேட்டை மாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரூராட்சி முன்னாள் தலைவா்கள் செல்வராஜ், நிா்மலாசெல்வம், தமிழரசி ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில், வீரபாண்டி முன்னாள் எம்எல்ஏ ராஜா, ஒன்றிய செயலாளா் வெண்ணிலா சேகா் ஆகியோா் கலந்துகொண்டு பொருள்களை வழங்கினா்.
விழாவில் ஜீவானந்தன், சிவசண்முகம், கணேசன், ராஜமாணிக்கம், முரளி , சண்முகம், கருணாமூா்த்தி, சரவணன், லெனின், மாரியப்பன், சீனிவாசன், குணசேகரன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.