அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துச் சேவை தொடக்கம்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 50% பயணிகளுடன் பேருந்துச் சேவை தொடங்கியது.  
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்காக பயணிகளுக்காக பார்த்திருக்கும் அரசுப் பேருந்துகள்.
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்காக பயணிகளுக்காக பார்த்திருக்கும் அரசுப் பேருந்துகள்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 50% பயணிகளுடன் பேருந்துச் சேவை தொடங்கியது. 
தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சேலம், நாமக்கல் உள்ளிட்ட நோய் பாதிப்பு அதிகம் காணப்பட்ட 11 மாவட்டங்களை தவிர்த்து இதர மாவட்டங்களில் கடந்த 2 வாரமாக பேருந்து சேவை செயல்பட்டது. 

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் 50% பயணிகளுடன் பேருந்துச் சேவை தொடங்கியது.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் பேருந்து சேவை தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,047 பேருந்துகளில் 65% பேருந்துகள் மட்டும் தற்போது இயக்கப்படுகின்றன. 

இதில் 302 நகர பேருந்துகள் 406 புறநகர் பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. 35 சதவிகித பேருந்துகள் இயக்கப்படவில்லை. தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தம்மம்பட்டி, வீரகனூர்  பேருந்து நிலையங்களில் காலை 6 மணி முதல்  அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதில் குறைந்தது 5 பயணிகளுக்கு மேல் இருந்த பேருந்துகள் இங்கிருந்து வெளியூர்களுக்கு புறப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com