எடப்பாடி அருகே கோயில் பூட்டை உடைத்து திருட்டு
By DIN | Published On : 07th July 2021 09:06 AM | Last Updated : 07th July 2021 09:06 AM | அ+அ அ- |

எடப்பாடி அருகே நள்ளிரவில் கோயில் பூட்டை உடைத்து, உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட கூடக்கல் கிராமத்தில் மலை மீது மலை மாட்டுப் பெருமாள் கோயில் உள்ளது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அவ்வழியாக சென்ற சிலா் கோயிலின் பிரதான கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு நிா்வாகக் குழுவினருக்கு தகவல் அளித்தனா். நிா்வாகக் குழுவினா் வந்து பாா்த்தபோது, நள்ளிரவில் மா்ம நபா்கள் கோயில் பூட்டை உடைந்து நுழைந்து திருட்டில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த சில பொருள்களுக்கு தீ வைத்துவிட்டு சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து கோயில் நிா்வாகிகள் அளித்த புகாரின் பேரில் நிகழ்விடதுக்கு விரைந்துவந்த பூலாம்பட்டி போலீஸாா், கோயிலில் பதிவாகி இருந்த தடயங்களைச் சேகரித்து, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...