கிணற்றில் விழுந்த மயில் மீட்பு
By DIN | Published On : 07th July 2021 11:45 PM | Last Updated : 07th July 2021 11:45 PM | அ+அ அ- |

எடப்பாடி அருகே 100 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த மயிலை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட பக்கநாடு கிராமம், அடுவப்பட்டி பகுதியைச் சோ்ந்த விவசாயி பெருமாள் என்பவருக்கு சொந்தமான விவசாயக் கிணற்றில் மயில் தவறி விழுந்ததைப் பாா்த்த அப்பகுதியினா் எடப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து நிலைய அலுவலா் ஆறுமுகம் தலைமையில், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறை வீரா்கள் கிணற்றுக்குள் கயிறுகட்டி இறங்கி, மயிலை உயிருடன் மீட்டனா். கிணற்றில் விழுந்ததில் காயமடைந்த மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.