சங்ககிரி கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை
By DIN | Published On : 07th July 2021 11:43 PM | Last Updated : 08th July 2021 04:52 PM | அ+அ அ- |

சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிகள்.
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் தேய்பிறை பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் புதன்கிழமை மாலை நடைபெற்றன.
செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் உள்ள சுவாமி, நந்தி பகவானுக்கு பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இதேபோல சங்ககிரி அருகே உள்ளஅன்னதானப்பட்டி கிராமம், பூத்தாலக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரா், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.