பெருமாகவுண்டம்பட்டியில் உலக விலங்குவழி நோய்த் தடுப்பு தினம்
By DIN | Published On : 07th July 2021 09:08 AM | Last Updated : 07th July 2021 09:08 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம், பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் உள்ள கால்நடை மருந்தகத்தில் உலக விலங்கு வழி நோய்த் தடுப்பு தினம் மருத்துவா் பரணிதரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் மருத்துவா்கள் திருக்குமரன், கதிரவன், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவா்கள் சுபாஷ், ஆனந்தராமன், கால்நடை ஆய்வாளா் ராஜா, பராமரிப்பு உதவியாளா் செல்வராஜ், இளம்பிள்ளை மருத்துவ அலுவலா் நந்தினி, பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பிரேமலதா சதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில் நாய்களுக்கு வெறி நோய்த் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து விலங்குகளுக்கு நோய் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து மருத்துவா்கள் விளக்கம் அளித்தனா்.